ஹிந்தி தேர்வு: தமிழகத்தைச் சேர்ந்த 80,000 பேர் பங்கேற்பு
ஹிந்தி தேர்வு: தமிழகத்தைச் சேர்ந்த 80,000 பேர் பங்கேற்பு
ADDED : ஆக 25, 2025 12:43 AM

சென்னை: ஹிந்தி பிரசார சபா சார்பில், நேற்று நடந்த அடிப்படை ஹிந்தி தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்த 80,000 பேர் ஆர்வ முடன் பங்கேற்றனர்.
நாட்டில் ஹிந்தி மொழியை பரவலாக்க, ஹிந்தி பிரசார சபாக்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சியில், தக்ஷின பாரத ஹிந்தி பிரசார சபாக்கள் இயங்குகின்றன.
இவற்றின் சார்பில் வழங்கப்படும் பாடத்திட்டங்களை, ஹிந்தி பண்டிட் கள், ஆர்வம் உள்ளோ ருக்கு கற்பிக்கின்றனர். கற்போரின் திறமையை அங்கீகரிக்க, எட்டு விதமான தேர்வுகளை ஹிந்தி பிரசார சபா நடத்துகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை, ஹிந்தி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த 9, 10ம் தேதிகளில், உயர்நிலை தேர்வுகள் நடந்தன.
நேற்று பரிட்சயா, பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா போன்ற அடிப்படை தேர்வுகள் நடந்தன. அதில், சென்னையில், 35,000 பேர் உட்பட, தமிழ கம் முழுதும் 80,000 பேர் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர்.
அடுத்த தேர்வுகள், 2026 பிப்ர வரியில் நடைபெற உள்ளன.