/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைக்கு எமனாக பிளாஸ்டிக் கழிவுகள்
/
கால்நடைக்கு எமனாக பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : ஆக 25, 2025 12:43 AM

பொங்கலுார்; கிராமப்புறங்களில் கால்நடைகளே விவசாயிகளின் வாழ்வாதாரம். மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை நிலவுகிறது. கால்நடைகள் கிடைத்ததை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமாகும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசி எறிகின்றனர்.
அதில் எழும் வாசனை காரணமாக அவற்றை கால்நடைகள் சாப்பிட துவங்குகின்றன. அவ்வாறு சாப்பிடும் கால்நடைகள் சில நாட்களில் வயிறு உபாதை ஏற்பட்டு ஜீரணமாகாமல், தீவனம் எடுப்பதை தவிர்த்து பட்டினி கிடந்து விரைவில் இறந்து விடுகின்றன. கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்தும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதை உணர்ந்தால் யாரும் பிளாஸ்டிக்கை கண்ட இடங்களில் வீசி எறிய மாட்டார்கள்.