தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.73,840!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.73,840!
ADDED : ஆக 21, 2025 09:43 AM

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது. தொடர்ந்து 10வது நாளாக தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,230க்கு விற்பனை ஆகிறது. கடந்த 10 நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது.
10 நாட்களில் (ஆக.12 முதல் ஆக.21 வரை) ஒரு சவரன் விலை நிலவரம்;
ஆக.11 - ரூ. 75,000
ஆக. 12 - ரூ.74,360
ஆக.13 -ரூ.74,320
ஆக.14-ரூ.74,320
ஆக.15-ரூ. 74,240
ஆக.16-ரூ.74,200
ஆக.17-ரூ.74,200
ஆக.18-ரூ, 74,200
ஆக.19-ரூ. 73,880
ஆக.20-ரூ.73,440
ஆக.21- ரூ.73,840