தங்கம் விலை சற்று குறைவு: ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை
தங்கம் விலை சற்று குறைவு: ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை
ADDED : செப் 17, 2025 10:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இன்று (செப் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 15) 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,210 ரூபாய்க்கும், சவரன், 81,680 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (செப் 16) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 10,280 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 82,240 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில் இன்று (செப் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,270க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.