ADDED : ஆக 14, 2025 07:13 AM

பிரதமர் மோடியை, துரை வைகோ சந்தித்து, ரஷ்யாவில் இந்திய மாணவர்களை மீட்க கோரிக்கை வைத்தார். அதை தவறாக சொல்லவில்லை. ஆனால், தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்று, லோக்சபாவுக்கு சென்றவர், ரஷ்ய மாணவர்களை மீட்பதற்காக, பிரதமரை சந்தித்தபோது கொடுத்த கடிதத்தில், பா.ஜ., - எம்.பி.,க்கள் கையெழுத்தை பெற்று கொடுத்திருக்கிறார்.
பா.ஜ.,வுடன் கள்ள கூட்டணி வைத்திருப்பதால் தானே, இவர் கேட்டதும் அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, தன் முகநுால் பதிவில் வெளியிடப்பட்ட கடிதத்தில், பா.ஜ., என குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை அழித்து இருக்கிறார்.
தனி கட்சி துவங்கச் சொல்லி, மூத்த தலைவர்கள் சிலரே வலியுறுத்துகின்றனர். அனைவருடன் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும். மதவாத சக்திகளால், தி.மு.க., ஆட்சிக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்வோம்.
- மல்லை சத்யா, துணை பொதுச்செயலர், ம.தி.மு.க.,