ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்
ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்
ADDED : செப் 17, 2025 03:00 PM

சென்னை: 'ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 1949ம் ஆண்டு செப்.,17ம் திமுகவை அண்ணாதுரை தோற்றுவித்தார். இந்தக் கட்சி தொடங்கி 76 ஆண்டுகள் ஆனதையொட்டி, திமுகவின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கட்சியினருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் தளப்பதிவில்; என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் அண்ணா! புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், “திமுகவை வகுத்தால் தமிழகம்! தமிழக மக்களை எல்லாம் கூட்டினால் திமுக' என்று வளர்ந்திருக்கிறோம்!
ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.