ADDED : டிச 13, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முகூர்த்த நாட்களில், பத்திரப்பதிவு முன்பதி வுக்கு, கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அந்த வகையில், கார்த்திகை மாத கடைசி முகூர்த்த நாளான டிச., 15ல், சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வழக்கமாக, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும், சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்கள் வழங்கப்படும்.
வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும்.

