ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம்
UPDATED : டிச 31, 2025 09:11 AM
ADDED : டிச 31, 2025 06:29 AM

நமது நிருபர்
ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாளை நியமனம் செய்து தமிழகம் அரசு உத்தரவிட்டுள்ளது.
2026ம் ஆண்டுக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஆயுதப்படை டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
1. மகேஸ்வர் தயாள் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம்
2. சந்தீப் மிட்டல்- சைபர் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம்
3. பி.பாலநாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம்
4. டி.எஸ்.அன்பு- சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்
5. பிரேம் ஆனந்த் சின்ஹா- ஆவடி போலிஸ் கமிஷனராக நியமனம்
6. தீபக் எம்.தாமோர்- மத்திய அரசு பணிக்கான ஏடிஜிபியாக நியமனம்
7. செந்தில்குமார்- தலைமையிட ஏடிஜிபியாக நியமனம்.
8. அனிசா உசேன்- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம்.
9. நஜ்முல் ஹோடா- சென்னை, செயல்பாடுகள் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக நியமனம்
10. டேவிட்சன் தேவாசீர்வாதம்- ஆயுதப்படை டிஜிபியாக நியமனம்
11. மகேந்தர் குமார் ரத்தோட்- காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக நியமனம்.
12. கே.சங்கர்- சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம்.
13. அமல்ராஜ்- தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமனம்.
14. அபின் தினேஷ் மோடாக்- அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி ஆக நியமனம்.
15. தினகரன்- வண்டலூர் தமிழக போலீஸ் பயிற்சி அகாடமி ஏடிஜிபியாக நியமனம்.
16. மாதவன்- திருநெல்வேலி மாநகரம், மேற்கு மண்டலத்தின் துணை கமிஷனராக நியமனம்.
17. மதிவாணன்- மதுரை மாநகரம், வடக்கு மண்டல துணை கமிஷனராக நியமனம்
18.பாண்டியராஜன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்பியாக நியமனம்.
19. மகேஸ்வரி- தமிழக கமாண்டோ படை எஸ்பியாக நியமனம்.
20. போகார்த்திக் குமார்- பள்ளிக்கரணை, தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமனம்
21. சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் டிஐஜியாக இருந்த ரம்யா பாரதி, ஐஜியாக நியமனம்.
22. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் டிஐஜியாக இருந்த பொன்னி ஐஜியாக நியமனம்.
23. சோனல் சந்திரா- மாநில குற்றப் பதிவு அலுவலகத்தின் ஐஜியாக நியமனம்.
24. ஜார்ஜ்- உளவுத் துறை டிஐஜியாக நியமனம்.
25. எஸ்பியாக பதவி வகித்த கலைச்செல்வன் டிஐஜியாக நியமனம்.
26. எஸ்பியாக பதவி வகித்த அருண்ஷக்திகுமார் டிஐஜியாக நியமனம்
27. எஸ்பியாக பதவி வகித்த அரவிந்த் மேனன் டிஐஜியாக நியமனம்
28. ஷே ஷாங் சாய்- காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமனம்
29. தேஷ்முக் சேகர் சஞ்சய்- ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமனம்.
30. எஸ்.தீபா கனிகர்- அமைச்சரவைச் செயலகத்தின் நிர்வாகப் பிரிவு டிஐஜியாக நியமனம்.

