ADDED : டிச 31, 2025 06:28 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியு-றுத்தி நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அறிவழகன் வர-வேற்றார். தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க, மாவட்ட தலைவர் சக்திவேல் பேசினார்.போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலகத்தை நவீன மயமாக்கம் செய்யப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்ப-டிப்பு என மாற்றியமைக்க வேண்டும். வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்-கனியாகவே உள்ள நிலையில், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை வி.ஏ.ஓ., எனவும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை வி.ஏ.ஓ., எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

