sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

/

வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்


ADDED : டிச 31, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில், 'பரமபத வாசல்' என்ற 'சொர்க்கவாசல் திறப்பு' நேற்று நடந்தது.

இதையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாடவீதி நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்-கார, பூஜை நடந்தது. அதிகாலை, 4:40 மணிக்கு, சீதேவி, பூதேவி சமேத நவநீத வேணுகோபால சுவாமி, சொர்க்க வாசல் வழியாக வந்தார். அப்-போது பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாப்பாரப்பட்டி வேணுகோபால சுவாமி கோவில், பழைய-பேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவில், நர-சிம்ம சுவாமி கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி சன்-னதி, அக்ரஹாரம் அம்பா பவானி கோவில், போச்சம்பள்ளி அடுத்த சென்றாயமலை சென்-றாய பெருமாள் சுவாமி கோவில் என பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இதில் பக்தர்களுக்கு லட்டு பிர-சாதம் வழங்கப்பட்டது.

* தேன்கனிக்கோட்டை சவுந்தர்யவல்லி சமேத பேட்டராயசுவாமி கோவிலில், அதிகாலை, 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவ மூர்த்தி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்-தர்களுக்கு அருள்பாலித்தார்.

சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள தட்சிண திருப்பதி என அழைக்கப்படும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில், பாத்-தக்கோட்டா சீதாராம ஆஞ்சநேயர் கோவில், சப்-படி ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்களில், நேற்று சொர்க்கவாசல் திறக்கப்-பட்டது.

அதேபோல், ஓசூர் கோகுல் நகர் அருகே ரங்கோ-பண்டித அக்ரஹாரத்தில் உள்ள ருக்மணி சத்ய-பாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், கோகுல்நகர் நந்தனம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில், ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்-வரர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள பிர-சன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ஆகிய-வற்றில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, தோமாலை சேவை, திருப்பள்ளி எழுச்சி, உற்சவம், திருப்பாவை, சாற்றுமுறை, சர்-வதரிசனம் நடந்தது






      Dinamalar
      Follow us