ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைப்பு
ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைப்பு
ADDED : மே 25, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, அனைத்து ரயில்வே மண்டலங்களிலும், விரைவு ரயில்களில் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி., எனப்படும், நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகை பெட்டிகள்எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வு இல்லாமல், பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயிலில், இன்று முதலும், ராமேஸ்வரம் - ஹூப்ளி விரைவு ரயிலில் நாளை முதலும், எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்து உள்ளது.

