/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகளுக்கான உணர்வு பூங்கா ரூ. 15 லட்சத்தில் பணிகள் துவக்கம்

ADDED : ஆக 21, 2025 11:47 PM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்கா 2 ஆயிரம் சதுரஅடியில் ரூ. 15 லட்சத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, சென்னை ஆகிய பகுதிகளில் ரூ. 90 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்கா அமைக்க திட்ட மிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட ஆரம்பகால தலையீட்டு மையம் அருகே 2 ஆயிரம் சதுரஅடியில் ரூ. 15 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கி நடக்கிறது.
இந்த பூங்காவில் புலன் உணர்வு ஒலிக்கான ஒலி பலகைகள், உள்பட குழந்தைகளின் உணர்வு செயலாக்கக் கோளாறுகளை சிகிச்சை அளிக்க வடிவமைக்கப்பட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது. பூங்காவை சுற்றி தடுப்புகள் அமைத்து விலங்குகள் நுழைவது தடுக்கப் படவுள்ளது.
இதன் மூலம் சிறப்பு குழந்தைகள், தங்கள் சூழலில் இருந்து புலன் தொடுதல், பார்வை, ஒலி, இயக்கம், உடல் விழிப்புணர்வு போன்ற பல்வேறு புலன்களைத் துாண்டி தகவல்களைச் செயலாக்கி பதிலளிக்கும் திறனை வளர்த்து மேம்படுத்த உதவும் வகையில் உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்கா அமைக்கப்படுகிறது.