/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு கிடங்கில் இருந்து பறக்கும் வண்டுகளால் தொல்லை
/
அரசு கிடங்கில் இருந்து பறக்கும் வண்டுகளால் தொல்லை
ADDED : ஆக 21, 2025 11:48 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் இருந்து வரும் மூங்கில் பூச்சி வண்டுகளால் ஆவாரம்பட்டி வளையாபதி தெரு மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் ஆவாரம்பட்டி வளையாபதி தெரு அருகே செயல்படும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து உற்பத்தியாகும் ஏராளமான மூங்கில் பூச்சி வண்டுகள் அருகே உள்ள வீடுகளுக்கு பறந்து உணவு பொருள் முதல் அனைத்து பகுதிகளும் ஊர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் அதிகாரியிடம் தெரிவித்தும் எவ்வித பலனுமில்லை.
இதனால் கடந்த சில வாரங்களாக நிம்மதியாக சாப்பிடவும் துாங்க முடியவில்லை என்பதால் நகராட்சி நிர்வாகம் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் விரும்புகின்றனர்.