/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெற் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் சுள்ளங்குடி விவசாயிகள் வேதனை

ADDED : டிச 24, 2025 05:52 AM
நரிக்குடி: நரிக்குடி சுள்ளங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டதால் நெல் நடவு செய்தனர். ஓரளவிற்கு நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. உரமிட்டு களை பொறுக்கி, இன்னும் சில நாட்களில் பலனுக்கு வரும் நிலையில் இருந்தன. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. விளைச்சல் பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வசந்தி, விவசாயி: இந்த ஆண்டு ஓரளவிற்கு மழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் இருந்ததால் ஏராளமானோர் நெல் விவசாயத்தில் ஈடுபட்டோம். காட்டுப் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தியது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்திய நெற்பயர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.