/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டட தொழிலாளி கொலை வழக்கில் உறவினர் கைது
/
கட்டட தொழிலாளி கொலை வழக்கில் உறவினர் கைது
ADDED : டிச 12, 2024 02:26 AM

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் கட்டட தொழிலாளியான மங்கையன் 40, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினரான முத்துக்குமார் 41, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பாலையம்பட்டியில் நேற்று முன்தினம் புதர் பகுதியில் மங்கையன் எரித்துக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் நீராவி தெருவை சேர்ந்த முத்துக்குமாரை பிடித்து விசாரணை செய்ததில், மங்கையனின் தங்கை முறை உறவுக்கார பெண்ணுக்கும் முத்துக்குமாருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை அவர் கண்டித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று மங்கையன் குடித்து விட்டு மடத்தில் துாங்க சென்ற போது, எதிரே குடிபோதையில் வந்த முத்துக் குமாரிடம் என் உறவுக்கார பெண்ணிடம் உள்ள பழக்கத்தை நிறுத்தி கொள் என கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த முத்துக்குமார் மங்கையன் உடலிலிருந்த போர்வையால் அவரது முகத்தை மூடி கத்தியால் கழுத்தில் குத்தினார். கீழே விழுந்த மங்கையன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார் . உடலை அந்த பகுதியில் இருந்த விறகு கட்டைகளுக்கு நடுவே வைத்து, பெட்ரோலை எடுத்து ஊற்றி தீ வைத்து தப்பினார்.
போலீசார் முத்துக்குமாரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

