/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராமானுஜம் பிறந்தநாள் கருத்தரங்கு
/
ராமானுஜம் பிறந்தநாள் கருத்தரங்கு
ADDED : டிச 23, 2025 05:59 AM
காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக தேசிய கணித நாள் நடத்தப்பட்டது. கணித மேதை சீனிவாசன் ராமானுஜம் பிறந்த நாளை போற்றும் வகையில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர, நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவகுமார் வரவேற்றார். கணித பேராசிரியர் சுவாமிநாதன் காணொளி மூலம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலூர் அரசு கல்லூரி கணித பேராசிரியர் பொன்னப்பன், சென்னை எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுந்தரேஸ்வரன் கிராப் பாராமீட்டர் என்ற தலைப்பில் பேசினர். துறை தலைவர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

