/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் 5வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
/
விருதுநகரில் 5வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
ADDED : டிச 23, 2025 05:58 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில், ஐந்தாவது நாளாக நேற்று செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.
நேற்று நடந்த போராட்டத்தில் செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழ் புலிகள் கட்சி மாநில நிர்வாகி வீரப்பெருமாள், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் காளிதாஸ், கமல் கண்ணன், நாகேந்திரன், இந்திய கம்யூ., மாவட்டச் செயலாளர் சமுத்திரம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணி தலைவர் பீமாராவ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

