/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே புகையிலை, கஞ்சா தாராளம்! வியாபாரிகளால் ஏஜன்ட்களாக மாற்றும் கொடுமை
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே புகையிலை, கஞ்சா தாராளம்! வியாபாரிகளால் ஏஜன்ட்களாக மாற்றும் கொடுமை
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே புகையிலை, கஞ்சா தாராளம்! வியாபாரிகளால் ஏஜன்ட்களாக மாற்றும் கொடுமை
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே புகையிலை, கஞ்சா தாராளம்! வியாபாரிகளால் ஏஜன்ட்களாக மாற்றும் கொடுமை
ADDED : டிச 24, 2025 05:47 AM

அருப்புக்கோட்டை, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு தாராளமாகவும், வியாபாரிகளால் கஞ்சா விற்கும் ஏஜன்ட்களாகவும் மாணவர்கள் மாற்றப்பட்டு வரும் கொடுமை நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனர்.
இருப்பினும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே இது போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு ஊர்வலங்கள், பிரச்சாரங்கள் செய்தும் பயன் இல்லை.
அருப்புக்கோட்டையில் பள்ளி கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி மையங்களில் படிக்க ஆயிரக் கணக்கான மாணவர்கள் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
இவர்களில் ஒரு சில மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி, பின்னர் கஞ்சாவை பயன்படுத்துகின்றனர்.
கஞ்சா விற்பவர்கள் இவர்களை கண்டறிந்து இவர்கள் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்கின்றனர்.
காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் இருந்து அருப்புக்கோட்டை பஸ்களில் செல்லும் மாணவர்களை குறி வைத்து அவர்களிடம் சிறிய கஞ்சா பொட்டலங்களை கொடுத்து பிற மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து பயன்படுத்த தூண்டுகின்றனர்.
இதில் மயங்கி மாணவர்கள் பயன்படுத்த துவங்கி, அடிமையாவதுடன் மீண்டும் கஞ்சா வாங்க தேடி ஓடுகின்றனர். இதை பயன்படுத்தி மாணவர்களை காசு கொடுத்து வாங்க கட்டாய படுத்துகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே ஒரு அரசு தொழிற்பயிற்சி மையத்தில் கஞ்சா பயன்படுத்திய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களை எச்சரித்தும், பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர்.
தூத்துக்குடி பகுதியில் இருந்து ஏஜன்ட்கள் வந்து மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
போலீசார் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டாலும், இது போன்ற கஞ்சாவிற்கும் ஏஜன்ட்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.

