/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளியூர் நபர்களுக்கு வேலை தர எதிர்ப்பு வனத்துறை அலுவலகம் முற்றுகை
/
வெளியூர் நபர்களுக்கு வேலை தர எதிர்ப்பு வனத்துறை அலுவலகம் முற்றுகை
வெளியூர் நபர்களுக்கு வேலை தர எதிர்ப்பு வனத்துறை அலுவலகம் முற்றுகை
வெளியூர் நபர்களுக்கு வேலை தர எதிர்ப்பு வனத்துறை அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 21, 2025 08:30 AM
திருச்சுழி,: திருச்சுழி மாங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய் வனத்துறை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அங்கு உள்ளூர் மக்களை தவிர்த்து வெளியூர் நபர்களுக்கு வேலையை தருவதை எதிர்த்து கிராம மக்கள் வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முத்துராமலிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது மாங்குளம். இங்குள்ள கண்மாயில் வனத்துறை சார்பில் நர்சரிகள் அமைக்கப்பட்டு நாற்றங்கால், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் வெளியூரிலிருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வனத்துறை தோட்டம் அமைந்துள்ள மாங்குளம் கண்மாய் பகுதி வனத்துறை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், கண்மாயை சர்வே செய்து தரவும், வனத்துறை தோட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் பெயர், கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை , உள்ளூர் மக்களை பணியில் அமர்த்த கோரியும் மாங்குளம் கிராமத்தினர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த வருவாய் துறை போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.