/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடங்கி கிடக்கும் குப்பை வண்டிகள்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடங்கி கிடக்கும் குப்பை வண்டிகள்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடங்கி கிடக்கும் குப்பை வண்டிகள்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடங்கி கிடக்கும் குப்பை வண்டிகள்
ADDED : ஆக 21, 2025 08:29 AM

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடங்கி கிடக்கும் குப்பை வண்டிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2021ல் குப்பை வண்டிகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. நாளடைவில் இதில் 75 சதவீத வண்டிகளை கூரைக்குண்டு ஊராட்சியின் துாய்மை பணிக்கு கொண்டு சென்றனர். 4 குப்பை வண்டிகள் மட்டும் தற்போது உள்ளன. 2025 மார்ச்சில் ஊராட்சிகளுக்கென பேட்டரி குப்பை வண்டிகள் வழங்கப்பட்டன. இருப்பினும் தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தள்ளுவண்டிகள் ஏன் கலெக்டர் அலுவலக வளாகத்திலே இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை.
கூரைக்குண்டு பெரிய ஊராட்சியாக உள்ளதால் துாய்மை பணியில் சுணக்கம் உள்ளது. குப்பை வண்டிகளை சிறு சிறு பணிகளுக்கு பயன்படுத்தலாம். அப்படியே விடுவது அதை துருப்பிடிக்க தான் செய்யும் எனவே ஒன்றிய நிர்வாகம் பயனின்றி நிற்கும் குப்பை தள்ளுவண்டிகளை பயன்படுத்த வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் இவ்வாறு நிற்பதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாகி, மழை, வெயிலில் துருப்பிடிக்க தான் வாய்ப்புள்ளது.