/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மயான பாதை அடைப்பு தைலாகுளம் மக்கள் தவிப்பு
/
மயான பாதை அடைப்பு தைலாகுளம் மக்கள் தவிப்பு
ADDED : டிச 24, 2025 05:44 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார்- சிவகாசி சாலையில் அமைந்துள்ள தைலாபுரம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதி மயானத்திற்கு செல்லும் பாதையில் ரயில்வே இருப்பு பாதை அமைந்துள்ளது.
தற்போது ரயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் வருவதால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அந்த பாதையை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து நேற்று முன் தினம், பாதையை அடைக்க வந்தனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பாதையை ரயில்வே நிர்வாக மூடினால் மயானத்திற்கு செல்ல மாற்று வழி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
எனவே, மாற்று வழி ஏற்படுத்தியோ அல்லது சுரங்கப்பாதை அமைத்து தரவோ வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

