/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளைஞர் இலக்கிய திருவிழா ஆலோசனைக் கூட்டம்
/
இளைஞர் இலக்கிய திருவிழா ஆலோசனைக் கூட்டம்
ADDED : டிச 24, 2025 06:32 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இளைஞர் இலக்கிய திருவிழா போட்டிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்து.
நுாலகத்துறை சார்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளைஞர் இலக்கிய திருவிழா போட்டிகள் வரும் ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்கிறது.
விழாவில், வினாடி வினா, விவாத மேடை, ஓவியம், பேச்சு போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஆங்கிலம் மற்றும் தமிழ் நுால் அறிமுகம், பிராம்ப் இன்ஜினியரிங், பேச்சு போட்டி, உடனடி ஹைக்கூ என 10 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 5,000, 4,000, 3,000 ரூபாய் என 3 பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் எம்.ஜி.ஆர்.அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் செல்வராணி தலைமை தாங்கினார். மயிலம் தமிழ்க் கல்லுாரி முதல்வர் (ஓய்வு) சற்குணம் சிறப்புரையாற்றினார். கல்லுாரி நுாலகர் மணிவண்ணன் வரவேற்றார்.
நுாலக வாசகர் வட்ட தலைவர் சொக்கநாதன், மாவட்ட நுாலக அலுவலர் இளஞ்செழியன் வாழ்த்தி பேசினார். நல் நுாலகர் அன்பழகன் போட்டிகள் குறித்து விளக்க உரையாற்றினார். நுாலகர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நுாலகர் வேல்முருகன் நன்றி கூறினார்.

