/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2025 06:33 AM
விழுப்புரம்: மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி அறிக்கை:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சிதைத்ததோடு, இந்த திட்ட பணிகளை சீர்குலைத்து நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளனர்.
மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து இந்த திட்டத்தை முடக்கியதோடு, வேலை நாட்களை குறைத்து, பயனாளிகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளனர்.
காந்தியின் பெயரை நீக்கி, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியதோடு, நுாறு நாள் பணியே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க துடிக்கும் பா.ஜ., அரசின் செயலை கண்டிப்பது. இதற்கு துணை போகும் அ.தி.மு.க.,வை கண்டித்தும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று 24ம் தேதி காலை 10:00 மணிக்கு முகையூர் வடக்கு, தெற்கு, மணம்பூண்டி ஒன்றியங்கள் மூலம் முகையூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலுார், விக்கிரவாண்டி தொகுதிகளில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., மாவட்ட, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி என அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

