/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தயார் நிலையில் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா காண்பது எப்போது
/
தயார் நிலையில் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா காண்பது எப்போது
தயார் நிலையில் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா காண்பது எப்போது
தயார் நிலையில் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா காண்பது எப்போது
ADDED : ஜூலை 29, 2025 11:54 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் திறப்பு விழா தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் வி.சாலை ஊராட்சி அடைக்கலாபுரம் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 நீதிபதிகள் குடியிருப்புடன், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா பூமி பூஜையில் பங்கேற்று கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.
தற்போது கட்டடப் பணி முடிவடைந்து ஒப்பந்ததாரர் பொதுப்பணித்துறையிடம் சாவிகளை ஒப்படைத்து விட்டார். நீதிமன்ற வளாகம் தயார் நிலையில் உள்ளதை திறப்பு விழாவிற்காக பார்வையிட்ட மாவட்ட நீதிபதி, வளாகத்தில் அடிப்படை வசதியான தண்ணீர் வசதி இல்லாதது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.
உடனடியாக வளாகத்தில் தண்ணீர் வசதி உள்ளிட்ட ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும் என பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகம் திறப்பு விழா தள்ளிப்போகிறது.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் புதிய நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்து முடித்து விரைந்து திறப்பு விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

