ADDED : ஏப் 09, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு த.வெ.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கோவிந்தன், 25; மாற்றுத்திறனாளி. இவரது குடும்பத்திற்கு விழுப்புரம் மாவட்ட தென் மேற்கு த.வெ.க., சார்பில் மாவட்ட செயலாளர் வடிவேல், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை, காய்கறி, துணிகளை வழங்கினார்.
மேல்காரணை ஸ்ரீதர், ராஜதுரை, திருமலை, மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் விஜய்தீப், இளைஞரணி அமைப்பாளர் பிரதிவிராஜ், பாலாஜி, ஒன்றிய நிர்வாகிகள் முத்து, ரஞ்சித், ராமு, கிளை நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், கோகுல், அருண்குமார், தவசி உட்பட பலர் பங்கேற்றனர்.

