கர்நாடகாவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ்சில் தீப்பற்றியதில் 10 பேர் பலி
கர்நாடகாவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ்சில் தீப்பற்றியதில் 10 பேர் பலி
UPDATED : டிச 25, 2025 09:06 AM
ADDED : டிச 25, 2025 07:33 AM

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் பஸ் ஒன்று, லாரி மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியார் பஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் 10 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
விபத்து அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்து இருக்கிறது.
நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

