ADDED : செப் 17, 2025 11:33 PM

வானுார்: பிரதமர் மோடியின், 75வது பிறந்த நாள் விழா மரக்காணம் வட்டம் கீழ்புத்துப்பட்டு பா.ஜ., சார்பில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பா.ஜ., நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் காலாப்பட்டு விநாயகர் பேரவையின் நிறுவனர் கண்ணன், கருணாகரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் மூர்த்தி, விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஞானசேகரன், முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் காத்தவராயன், விவசாய அணியின் மாவட்ட துணைத் தலைவர் சரவணன், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, மரக்காணம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சக்திவேல், வானுார் ஒன்றிய முன்னாள் தலைவர் கார்த்திகேயன், விவசாய அணி மாவட்ட தலைவர் குட்டியாண்டி மற்றும் நிர்வாகிகள் கந்தன், சென்னி, ஏழுமலை, கண்ணாயிரம், சுப்பிரமணி, ஹரிகுமார், சுந்தர், செல்வம், குப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.