/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் கால் முறிந்து தவித்த பசு : கால்நடைத்துறையினர் மீட்டு சிகிச்சை

ADDED : நவ 06, 2025 05:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில், விபத்தில் சிக்கி கால் முறிந்து கிடந்த சினை பசுவை, கால்நடைத்துறையினர் மீட்டு சிகிச்சையளித்தனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடிலிருந்து, ரயில்வே மேம்பாலம் வழியாக வந்த பசு மாடு மீது, நேற்று காலை 10:30 மணியளவில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முன்பக்க வலது கால் முறிந்த பசு, மேம்பாலத்தின் ஓரமாக மயங்கி விழுந்து கிடந்தது. தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் மற்றும் கால்நடை துறையினர் பசுவை ஜெ.சி.பி., மூலம் மீட்டனர்.
பின் அருகே உள்ள ரயில்வே காலனி மைதானத்தில் வைத்து விழுப்புரம் நடமாடும் கால்நடை மருத்துவ குழுவைச் சேர்ந்த டாக்டர் பாலாஜி தலைமையிலான குழுவிவனர் பசுமாட்டிற்கு சிகிச்சையளித்தனர்.
அதிகாரிகள் விசாரணையில் விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்த லதா என்பவரது பசு மாடு என்பதும், மேய்ச்சலுக்கு வந்தபோது, விபத்தில் சிக்கி கால் முறிந்ததும் தெரிந்தது. 7 மாத கால சினை பசு என்பதால், கால் நடை மருத்துவக்குழுவினர், அதற்கு சிகிச்சையளித்து காப்பாற்றி அதன் உரிமையாளிரிடம் ஒப்படைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த தீயணைப்பு மற்றும் கால்நடை துறையினரை, பொது மக்கள் பாராட்டினர்.