/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளி வீட்டில் தீ விபத்து: நகை, பணம் எரிந்து சேதம்
/
தொழிலாளி வீட்டில் தீ விபத்து: நகை, பணம் எரிந்து சேதம்
தொழிலாளி வீட்டில் தீ விபத்து: நகை, பணம் எரிந்து சேதம்
தொழிலாளி வீட்டில் தீ விபத்து: நகை, பணம் எரிந்து சேதம்
ADDED : நவ 06, 2025 05:08 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே கூலி தொழிலாளி வீட்டில் காஸ் அடுப்பு தீ பிடித்து வீடு எரிந்ததில் நகை, பணம் மற்றும் பத்திரங்கள் சேதமடைந்தன.
வளவனுார் அடுத்த கலர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி ரஞ்சனி,40; இவர், நேற்று முன்தினம் தனது கூரை வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்த போது, அதன் மூலம் வெளியேறிய நெருப்பு வீட்டின் கூரையில் பிடித்து திடீரென வீடு தீபிடித்து எரிந்தது.
உடன் சுதாரித்து கொண்ட ரஞ்சனி, வீட்டிலிருந்து வெளியேறி கூச்சலிட்டார். அக்கம், பக்கத்திலிருந்தனர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் வீட்டிலிருந்த கட்டில், பிரோ, நிலம் மற்றும் வீட்டு பத்திரங்கள், 5 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரேஷன் கார்டு எரிந்து சாம்பலாகியது. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.