/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி
/
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி
ADDED : செப் 17, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அறுந்து கிடந்த ஒயரில் மின்சாரம் தாக்கியதில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
விழுப்புரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் சந்திரசேகரன், 41; கூலி தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, தனது வீட்டின் முன்பு நடந்து சென்றார்.
அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை தெரியாமல் பிடித்தார். அதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.