/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல்
/
மகளிர் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல்
ADDED : அக் 23, 2024 11:52 PM

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு பிரிவு, வராண்டா ரேஸ் இணைந்து தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
'அரசு தேர்வை கையால்வது எப்படி' தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பிரவின்குமார், ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வங்கித்துறை தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை, எப்படி அவற்றின் முக்கியத்துவம், மாணவிகள் தங்கள் குறிக்கோள்களை அடைந்து தேர்வில் வென்று தேவையான திறன்கள் வளர்த்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறினர்.
தேர்வுகள், பாடத்திட்டத்தை புரிந்து கொள்வதன் அவசியம், பயனுள்ள ஆய்வு நுட்பங்கள், தேர்வுமுறையில் முக்கியத்துவம் பற்றியும் கூறினர். தொடர்ந்து, மாணவிகள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
முன்னதாக, மகளிர் கல்லுாரி வேலைவாய்ப்பு அதிகாரி சாய்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பர்ஜானா நன்றி கூறினார்.

