/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
/
ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
ADDED : செப் 18, 2024 04:22 AM

விழுப்புரம் : விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் பொறியாளர் தின விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி முதல்வர் ஆமோஸ்ராபர்ட்ஜெயச்சந்திரன் வரவேற்று, பொறியாளர் தினம் உருவான வரலாற்றை எடுத்துரைத்தார். இக்கல்லுாரி யில் பயின்று பொறியாளர்களாக நற்பணியாற்றும் சன்மார் நிறுவன முன்னாள் தலைவர் சுவாமிநாதன், விருட்சா நிறுவன இயக்குநர் சரவணன், பொறியாளர்கள் விஜயகுமார், தில்லைநடராசன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அவர்கள், தொழில் நுட்ப வளர்ச்சிதான் நமக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஊக்கமாக உள்ளது. அதன் வளர்ச்சியினை அனைவரும் அறிந்து, நாம் சிறப்பாக பயனுற வேண்டுமெனில், பொறியாளர் தினம் அவசியம் கொண்டாட வேண்டும், அப்போதுதான் வளரும் பொறியாளர்கள் தங்கள் திறன்களை மிகச் சரியாக மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவர் என எடுத்துரைத்தனர்.
இ.எஸ்.பொறியியல் கல்லுாரி துணை முதல்வர் ஆன்ட்ரூஸ் உறுதிமொழி முன்மொழிந்தார். பொறியியல் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். கல்லுாரி துணை முதல்வர் சங்கர் நன்றி கூறினர்.

