ADDED : ஆக 15, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:மதுபோதையில் தாயை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் அடுத்த அரியூர் காட்டுப்புத்துாரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி மைத்ராதேவி, 55. இவர்களது மகன் ஆட்டோ டிரைவர் கார்த்திக், 30. கார்த்திக் நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, 'இறந்து போன தந்தையின் படத்தை ஏன் வீட்டில் வைக்கவில்லை?' என, தாயிடம் கேட்டார். இதில், மைத்ராதேவிக்கும், கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கார்த்திக், வீட்டிலிருந்த கத்தியால் தாயின் கழுத்தில் வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மைத்ராதேவி பலியானார். பாகாயம் போலீசார், காட்டுப்புத்துாரில் பதுங்கியிருந்த கார்த்திக்கை கைது செய்தனர்.