/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பஞ்., தலைவர் பதவி பறிக்க அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
/
பஞ்., தலைவர் பதவி பறிக்க அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
பஞ்., தலைவர் பதவி பறிக்க அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
பஞ்., தலைவர் பதவி பறிக்க அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
ADDED : ஆக 10, 2025 01:38 AM
வேலுார்:வேலுார் அருகே, பஞ்., தலைவரை தகுதி நீக்கம் செய்ய அரசுக்கு, கலெக்டர் சுப்புலெட்சுமி பரிந்துரைத்தார்.
வேலுார் மாவட்டம், கே.வி.,குப்பம் அடுத்த நாகல் பஞ்., தலைவர் பாலாசேட்டு, 54. இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரது மகன் கார்த்திக், அரசு பணிகள் செய்யும் ஒப்பந்ததாராக பதிவு செய்து, பணி செய்து வருகிறார்.
இதனால் பாலாசேட்டை பதவி நீக்கவும், அவரது மகன் கார்த்திக்கின் ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்யவும், ஜெயந்தன் என்பவர், கலெக்டருக்கு சுப்புலெட்சுமியிடம் புகார் அளித்தார். கலெக்டர் விசாரணை நடத்தினார்.
கார்த்திக், 2021 முதல் 2025ம் ஆண்டு வரை கே.வி.,குப்பம் பி.டி.ஓ., அலுவலகத்தில், 7.99 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும், நாகல் பஞ்சாயத்தில், 41.59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்த பணிகளும் செய்தது தெரிய வந்தது.
அரசாணை மற்றும் சட்டப்பிரிவிற்குட்பட்டு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் படி, பாலாசேட்டுவை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின், அரசு கூடுதல் தலைமை செயலருக்கு, கலெக்டர் அறிக்கை அனுப்பி உள்ளார்.