/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் நகை பறித்தவர் கைது
/
குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் நகை பறித்தவர் கைது
குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் நகை பறித்தவர் கைது
குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் நகை பறித்தவர் கைது
ADDED : செப் 01, 2025 05:57 AM
தொட்டியம்: குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தாயிடம் நகைகளை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, ஏலுார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 34. இவரது மனைவி சவிதா, 29. தம்பதிக்கு, 2 வயதில் ரக் ஷிதா என்ற குழந்தை உள்ளது.
ஆக., 21ல் சவிதா மகளுடன் வீட்டில் இருந்தபோது, தலையில், 'ஹெல்மெட்' அணிந்த மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, நகைகளை கேட்டு மிரட்டியுள்ளார். அச்சமடைந்த சவிதா, அணிந்திருந்த 4 சவரன் தாலி செயின், ஒரு சவரன் தோடு ஆகியவற்றை கழற்றி கொடுத்தார். நகைகளை பறித்து மர்ம நபர் தப்பினார்.
தொட்டியம் போலீசார், கொக்கு வெட்டியான் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், தொட்டியம் அருகே நாச்சியார் புதுாரை சேர்ந்த அருண்குமார், 30, என்பதும், சவிதாவிடம் நகைகளை பறித்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.