/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் வாலிபரை கொன்ற ஐவர் கைது
/
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் வாலிபரை கொன்ற ஐவர் கைது
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் வாலிபரை கொன்ற ஐவர் கைது
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் வாலிபரை கொன்ற ஐவர் கைது
ADDED : செப் 02, 2025 05:31 AM
திருச்சி: விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், சிறுமயங்குடி கிராமத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அந்த ஊரைச் சேர்ந்த கிரண்குமார், 26, என்ற தொழிலாளிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் உட்பட சில வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தோர் விலக்கி விட்ட நிலையில், பங்குனி ஆற்றில் சிலை கரைக்கப்பட்டது.
பின், திரும்பி வந்த கிரண்குமாரை, சரவணன், 26, அவரது உறவினர்கள் திவாகர், 18, சற்குணம், 18, முகிலன், 21, சஞ்சய், 18, ஆகிய ஐவரும் கல்லால் தாக்கினர். நெஞ்சில் படுகாயமடைந்த கிரண்குமார் உயிரிழந்தார்.
லால்குடி போலீசார், ஐவரையும் கைது செய்தனர். இதில், சற்குணம் வேளாண் பட்டய படிப்பு, திவாகர் மெக்கானிக்கல் பட்டய படிப்பு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.