/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து போராட்டம்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து போராட்டம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து போராட்டம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து போராட்டம்
ADDED : செப் 07, 2025 07:40 AM
திருப்பூர் : திருப்பூரில் பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் சீனிவாசன், 40; கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியின் போது, மின்சாரம் தாக்கியது.
அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் இறந்தது தெரிந்தது. இதுகுறித்து பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர். இச்சூழலில், உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து நிறுவனம் தரப்பில் எங்களுக்கு தகவல் அளிக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து, நிறுவனத்தின் கவனக்குறைவாலும், முன் ஏற்பாடு இல்லாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது; தொழிலாளர் சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு., மாவட் டத் தலைவர் சம்பத் வலியுறுத்தினார்.