/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறகடிக்கும் பெண்கள்! புதுமைப்பெண் திட்டத்தில், 29 ஆயிரம் மாணவியர் பயன்
/
சிறகடிக்கும் பெண்கள்! புதுமைப்பெண் திட்டத்தில், 29 ஆயிரம் மாணவியர் பயன்
சிறகடிக்கும் பெண்கள்! புதுமைப்பெண் திட்டத்தில், 29 ஆயிரம் மாணவியர் பயன்
சிறகடிக்கும் பெண்கள்! புதுமைப்பெண் திட்டத்தில், 29 ஆயிரம் மாணவியர் பயன்
ADDED : ஆக 28, 2025 06:19 AM

திருப்பூர்; 'புதுமைப் பெண்' திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை, 29 ஆயிரம் மாணவியர், அரசின், ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற்று, உயர்கல்வி பயில்கின்றனர். ஆண்டுக்காண்டு, உயர்கல்வி பயிலும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த, 2022, செப்., 5ல், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக, 'புதுமைப்பெண்' திட்டத்தை துவக்கியது. அரசு பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த பெண்கள், பட்டப்படிப்பு, ஐடிஐ,டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை முடிக்கும் வரை, மாதம், ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்து, கல்லுாரி படிப்புக்குள் மாணவிகள் நுழைந்த பிறகே, உதவித் தொகைக்கு அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.
மாவட்டத்தில், 71 கல்லுாரிகளில் இத்திட்டம் செயல்படுகிறது. கடந்த, 2021 - 22ம் ஆண்டில், 3,284 மாணவியர், 2022 -2023ல் 3,537 பேர், 2023 - 2024ல், 8,381 பேர், 2024 - 2025ல், 11,198 பேர் பயனடைந்துள்ளனர்.
நடப்பாண்டு, இதுவரை, 2,979 மாணவியர் பயன் பெறத் துவங்கியுள்ளனர். மொத்தம், 29 ஆயிரத்து 379 பேர் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளனர். இவர்களில் இதுவரை, 17 ஆயிரத்து 833 பேர் இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழ்ப்புதல்வன் 'தமிழ்ப்புதல்வன்' என்ற பெயரில் மாணவர்களுக்கும் இத்திட்டம், கடந்த, 2024, ஆக., 9ல் விரிவுபடுத்தப்பட்டது. 6 முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், உயர்கல்வியை தொடர, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில், 55 கல்லுாரிகளில் இத்திட்டம் செயல்படுகிறது. கடந்த, 2024 - 2025ம் ஆண்டில், 7,668 மாணவர், 2025 -2026ல் 1,443 மாணவர்கள் என, மொத்தம், 9,111 பேர் பயனடைந்துள்ளனர்; இதுவரை, 1,741 பேர் இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர்.
உதவித்தொகைபெறுவது எப்படி? மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி கூறுகையில், நான் முதல்வன் திட்டத்தில், மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை பெற, 6 முதல், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும்; அல்லது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
கல்லுாரியில் இத்திட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ காரணங்களால் நீண்ட விடுப்பு எடுக்க வேண்டியிருந்தால், விவரம் தெரிவிக்க வேண்டும், என்றார்.
உதவித்தொகை பெறுவது எப்படி?
நான் முதல்வன் திட்டத்தில், மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை பெற, 6 முதல், 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும்; அல்லது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவ, மாணவியர், தங்கள் கல்லுாரியில் இத்திட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுப்பது, இடையில் படிப்பை கைவிடுவது, அடிக்கடி 'ஆப்சென்ட்' ஆகும் மாணவ, மாணவியர் திட்டத்தின் பயனை பெற முடியாமல் போய்விடும். மருத்துவ காரணங்களால் நீண்ட விடுப்பு எடுக்க வேண்டியிருந்தால், கல்லுாரி ஆசிரியர்களிடம் விவரம் தெரிவிக்க வேண்டும்.
- ரஞ்சிதாதேவி,
மாவட்ட சமூக நல அலுவலர்.