நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளத்தில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்குள்ள நால்ரோட்டில் கணியூரிலிருந்தும் வரும் வாகனங்களும், குமரலிங்கத்திலிருந்து வரும் வாகனங்களும் சந்திக்கின்றன.
இதனால், இங்கு போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.