ADDED : ஆக 25, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார், 37. வீடு அருகில் உள்ள கிணற்றில் குதித்து பலியானார்.
இவரை காப்பாற்ற, நவீன்குமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்துவந்த பிரவீன்ராஜ், கிணற்றில் குதித்தார். 160 அடி ஆழ கிணற்றில், நான்கு மின் மோட்டார் பயன்படுத்தி நீரை வெளியேற்றி தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நவீன்குமார் உடல்நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டது. நேற்று இரவு வரை, 46 மணி நேரம் கடந்தும், பிரவீன்ராஜை கண்டறிய இயலவில்லை.