/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எலும்பை பதம் பார்க்க காத்திருக்கும் சாலை
/
எலும்பை பதம் பார்க்க காத்திருக்கும் சாலை
ADDED : அக் 20, 2025 10:44 PM

இருள்மயம்
தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.
- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)
'ஒளி'மயம்
கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர் சந்திப்பில், பகலிலும் தெருவிளக்குகள் எரிந்து மின்சாரம் வீணாகிறது.
- யோகேஷ், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)
அவலம்
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுகிறது. அரசு அலுவலகம் முன்பே நிலை இவ்வாறு இருக்கிறது.
- கிரீஸ், கோர்ட் வீதி. (படம் உண்டு)
அடைப்பு
கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் - திருவள்ளுவர் நகர் சாலை, பாரியூர் அம்மன் நகரில், பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.
- குமார், பாரியூர் அம்மன் நகர். (படம் உண்டு)
அபாயம்
காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, எம்.சி., நகர் முதல் வீதியில், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழி சரிவர மூடவில்லை. வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது.
- பாபுதரன், எம்.சி., நகர். (படம் உண்டு)
வீணாகிறது
அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- அபித், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)
-----------
ரியாக் ஷன்
சீரமைப்பு
ஆலங்காடு எட்டாவது வீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது குறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியானது. குழாய் வரும் பாதையில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டதால், தண்ணீர் வினியோகம் சீராகியுள்ளது.
- அருணாசலம், ஆலங்காடு. (படம் உண்டு)
அகற்றம்
திருநீலகண்டபுரம், பாப்பன் நகரில் குப்பைத்தொட்டியில் குப்பை நிறைந்திருந்தது. மாநகராட்சி ஊழியர் மூலம் குப்பை அகற்றப்பட்டு விட்டது.
- சக்திவேல்பிரகாஷ், திருநீலகண்டபுரம். (படம் உண்டு)
ஒளிர்கிறது
மங்கலம் ரோடு, கருவம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்திருந்தது. தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
- ஆனந்தராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)

