sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

என்றென்றும் தித்திக்கும் எங்கள் தலை தீபாவளி

/

என்றென்றும் தித்திக்கும் எங்கள் தலை தீபாவளி

என்றென்றும் தித்திக்கும் எங்கள் தலை தீபாவளி

என்றென்றும் தித்திக்கும் எங்கள் தலை தீபாவளி


UPDATED : அக் 20, 2025 10:42 PM

ADDED : அக் 20, 2025 10:40 PM

Google News

UPDATED : அக் 20, 2025 10:42 PM ADDED : அக் 20, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடும்பப்பொறுப்பை உணர்த்துகிறது

ரமணா - அகிலா:

திருமணமாகி மூனு மாசமாச்சு... ரெண்டு தரப்பு உறவினர் வீடுகளுக்கும் போய்ட்டு வர்றோம். ஒவ்வொரு வீட்லயும் அசத்தலா விருந்து; இப்ப தலைதீபாவளி கொண்டாட வந்திருக்கோம். இப்ப தீபாவளி விருந்து. திருமணத்துக்குப் பின்னாடி கொண்டாடுற முதல் பண்டிகை; இந்த மகிழ்ச்சியே தனிதான். இனிப்பு, பட்டாசு, புத்தாடைன்னு மட்டும் இருந்த தீபாவளி, இப்ப புதிய உறவுகளோடயும், குடும்பம்கற பொறுப்புகளோடயும் புதுசா உத்வேகத்தையும், கூடுதல் மகிழ்ச்சியையும் கொடுக்குது. (திருப்பூர் இடுவாயை சேர்ந்தவர் அகிலா; சாப்ட்வேர் டெவலப்பர். சென்னையை சேர்ந்தவர் ரமணா; ஐ.டி. அனலிஸ்ட்)

பரஸ்பரம் புரிதல்

நவீன் பிரபு - புனிதா தம்பதி:

''நிட்டிங் கம்பெனி நடத்திட்டு வர்றேன். திருமணத்துக்குப் பின், என்னோட ஆபீஸ் வொர்க்ல புனிதா உதவிகரமா இருக்காங்க. இல்லத்தரசியாகவும், புகுந்த வீட்டினர் மெச்சும் வகையில் நடந்துக்கிறார். தலைதீபாவளிக்காக புனிதா வீட்டுக்கு வந்திருக்கோம். பாரம்பரிய வேட்டி, சட்டையோட நானும், பட்டுச்சேலையோட புனிதாவும் சேர்ந்து தலை தீபாவளியை கொண்டாடுறோம். இனிப்பு, பட்டாசுன்னு மகிழ்ச்சியா கழியுது. புதிய உறவினர்களோட கொண்டாடுற பண்டிகை, பரஸ்பரம் புரிதலை ஏற்படுத்துறதா இருக்கு'' என்று கூறுகிறார் நவீன் பிரபு.

(திருப்பூர், குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் நவீன்பிரபு; அவிநாசி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் புனிதா. திருமணமாகி மூன்று மாதமாகிறது)

காதல்தானே வாழ்க்கை

அருண்குமார் ---- சுவஸ்திகா தர்ஷினி:

சுவஸ்திகா தர்ஷினி அவிநாசியை சேர்ந்தவர். தனது பெற்றோர் வீட்டில் தலைதீபாவளி கொண்டாடிய சுவஸ்திகா தர்ஷினியும், கணவர் அருண்குமாரும் கூறியதாவது:அற்புதமான சந்தோஷம் நிறைந்த காதல் திருமணம் எங்கள் வாழ்க்கையிலும் நடக்குமா என்று என நினைத்திருந்தோம். இறைவன் அருளால் இரு வீட்டினரின் சம்மதத்துடன், உறவினர்கள் ஆசிர்வாதத்துடன் அந்த இனிய தருணம் எங்கள் வாழ்க்கையிலும் நிறைவேறியது.

தற்போது தலை தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறோம். காதல் செய்யும் அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

கோகுல்ராஜ் -- ஐஸ்வர்யா:

அவிநாசி குருந்தக்காட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் பெற்றோர் வீட்டில் மனைவியுடன் சேர்ந்து தலை தீபாவளி கொண்டாடிய கோகுல்ராஜ் கூறியதாவது:என்னோட ஒய்ப் எனக்கு நெருங்கிய சொந்தம்தான்.

அப்பப்ப விசேஷம், விழாக்கள்ல சந்திச்சுக் குவோம். ரெண்டு பேருக்குமே மனசுக்குள்ள விருப்பம் இருந்துச்சு. படிப்பு, வேலை காரணமா ரெண்டு பேர் வீட்லயும் எங்க காதலுக்கு சின்ன எதிர்ப்பு இருந்துச்சு. பெற்றோருக்குப் புரியற மாதிரி நடந்துக்கிட்டோம். இன்னிக்கு ேஹப்பியா லைப் அமைஞ்சிருக்கு... தலை தீபாவளி தினத்தில் காலைல கோயிலுக்குப் போயிட்டு, வீட்ல நான் வெஜ்; மாலையில் சினிமான்னு ஒரே கொண்டாட்டமா இருக்கு... ஒய்ப்புக்கு தீபாவளி கிப்டா, திருமணத்துக்குப் பின்னாடி எடுக்குற போட்டோ ஷூட்டுக்காக கொடைக்கானல் இல்லைன்னா மூணாறு அழைச்சுட்டுப்போகப்போறேன்.

மகளுடன் தலைதீபாவளி

பிரகாஷ் - தீபிகா, கருடமுத்துார், பல்லடம்:

போன வருஷம், சூரசம்ஹாரத்தப்ப எங்களுக்கு திருமணமாச்சு... இப்ப ஒரு மாசமே ஆன மகளோட தீபாவளி கொண்டாடுறதுல மகிழ்ச்சி. குழந்தை இருக்கறதால, அதிகமா பட்டாசு வெடிக்கல. அதிகாலை கங்கா ஸ்நானம் முடிச்சு, தீபம் ஏத்தி வழிபட்டோம். பெரியவங்க கிட்ட ஆசி வாங்குனது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. வங்கி பணி, ஐ.டி., கம்பெனின்னு ரெண்டு பேருமே வேலைல பிஸி. மன இறுக்கம் அதிகம். பண்டிகையை கொண்டாடும் போது, உற்சாகமா இருக்கு... இது மறக்க முடியாத நாளா அமைஞ்சுருக்கு.

கற்பனை நிஜமானது

கதிர்செல்வம் - முத்துலட்சுமி:

கதிர்செல்வம் நம்மிடம் பகிர்ந்தவை: என்னோட சொந்த ஊர் திருவாரூர், மனைவியோட ஊர் தஞ்சாவூர். நான் திருப்பூர்ல சிட்கோ, முதலிபாளையத்தில் 'நிப்ட் -டீ' கல்லுாரியில் பணிபுரியறேன். மகடந்த செப்., மாசம் திருமணமாச்சு. திருமணமான 46வது நாளில் மனைவியோட வீட்ல தலை தீபாவளி கொண்டாடுறோம். வீட்ல பெரியவங்க கிட்ட ஆசி பெற்று, கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். அசத்தலான அசைவ விருந்து சாப்பிட்டோம். தலைதீபாவளியை வாழ்நாள்ல மறக்கவே முடியாது. என்னோட பெற்றோர் அடிக்கடி தலைதீபாவளி பத்தி சொல்லுவாங்க... நாங்களும் மனசில கற்பனை செஞ்சிருப்போம். அந்தக் கற்பனை நிஜமாயிடுச்சு.

சுவிட்சர்லாந்தில் கொண்டாட்டம் கவிசங்கர் - வனிஷா, திருநீலகண்டபுரம்: திருப்பூர்லயே பிறந்து வளர்ந்து திருமணமும் செஞ்சிருக்கோம். தலை தீபாவளியை வெளிநாட்டுல கொண்டாட தீர்மானிச்சோம். கடந்த ஜன., மாசம் எங்களுக்கு திருமணமாச்சு...'ஐடி' நிறுவன வேலைங்கறதுலான தலைதீபாவளியை ரிலாக்ஸா கொண்டாட முடிவெடுத்து, சுவிட்சர்லாந்து வந்துட்டோம். வெளியே சென்றுவந்தோம். தீபாவளின்னாலும் பட்டாசு கிடையாதுதான். ஆனா, பாரம்பரியமான வேட்டி, சேலை அணிஞ்சு, தீபம் ஏத்தி வச்சு, தீபாவளியை கொண்டாடுறோம். இந்த அனுபவம் என்னென்னைக்கும் இனிக்கும்... அடுத்து வர்ற ஆண்டுகள்ல, குடும்ப உறுப்பினர்களோட கொண்டாடுவோம்.








      Dinamalar
      Follow us