/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
/
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஆக 28, 2025 12:32 AM
அவிநாசி:
திருப்பூர், கருவம்பாளையம் கே.வி.ஆர். நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ பாலமுருகன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை 7:40 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடைபெறுகிறது. இதனையொட்டி, நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு சென்றனர்.
விழாவில், இன்று மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, விநாயகர் வழிபாடு, மூல மந்திர ஹோமம், 108 திரவியங்கள் மகா பூர்ணாகுதி ஆகியவற்றுடன் யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு கோபுர விமான கலசத்துக்கும், மூலவருக்கும் மஹா கும்பாபிஷேகம், ராமன் குருக்கள், திருநாகேஸ்வரம் தேவசேனாதிபதி குருக்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.