/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பரதம் கற்றால் அனைத்து கலைகளையும் கற்றதற்கு சமம்'
/
'பரதம் கற்றால் அனைத்து கலைகளையும் கற்றதற்கு சமம்'
ADDED : செப் 07, 2025 07:29 AM

ப ல்லடம் சிவரத்தின கலாக்ஷேத்ரா நாட்டிய பள்ளி மாணவியரின் சலங்கை பூஜை நிகழ்ச்சி, வனாலயம், அடிகளார் அரங்கில் நடந்தது. ப்ளூ பேர்டு பள்ளி நிறுவனர் ராமசாமி தலைமை வகித்தார். நாட்டிய போராசிரியர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்.
பல்லடம் வனம் அமைப்பின் செயலாளர் சுந்தர்ராஜ் பேசுகையில், ''கட்டடத்துக்கு அடித்தளம் போன்று, நமது வாழ்க்கைக்கும் அடித்தளம் வேண்டும். தர்மப்படி நாம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்த வேலையையும் பெரு விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த வேலை முழுமையாக நிறைவடையும். பரதநாட்டியம் நமது பாரம்பரிய கலை. இந்த கலையை கற்றுவிட்டால், ஒரு குழந்தை அனைத்தையும் கற்றதற்கு சமமாகும். பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும்தான் இந்த பரதக்கலை சொந்தமானது. ஏனெனில், இந்த கலையின் பிதாமகரே நடராஜ பெருமான் என்பதால், ஆண்களுக்கும் இதில் பங்கு உண்டு. ஆயிரம் ஆயிரம் கலைஞர்கள் இந்த பரதக்கலையை கற்று உலகப் புகழ் பெற வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, நாட்டிய பள்ளி மாணவியரின் சலங்கை பூஜை விழா கோலாகலமாக நடந்தது. நாட்டிய பள்ளி ஆசிரியர் திவ்யா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.