/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காவலர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி
/
காவலர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி
ADDED : செப் 07, 2025 07:28 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போலீஸ் குடியிருப்பில் விளையாட்டு போட்டி நடந்தது.
1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் காவலர் தினத்தை தமிழக அரசு ஆண்டுதோறும் செப்., 6ம் தேதி கொண்டாட தீர்மானித்தது.
அவ்வகையில், நடப்பாண்டு காவலர் தினம் கொண்டாடத்தை நேற்று கொண்டாடினர். காவல்துறையின் அர்ப்பணிப்பையும், சமூக பாதுகாப்பில் அவர்களின் பங்கையும் மக்களுக்கு நினைவூட்டும் வகையில் திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், திருப்பூர் போலீஸ் கமிஷனர் வளாகத்தில் உள்ள நினைவு ஸ்துாபிக்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
விளையாட்டு போட்டி இதையடுத்து, கோர்ட் வீதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று விளையாடினர்.
கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக் சேர், லெமன் ஸ்பூன், பாட்டிலில் நீர் நிரப்புதல், லக்கி கார்னர், பலுான் ஊதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
போலீஸ் குடும்பத்தினர் உற்சாகமாக பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சேகர் செய்திருந்தார்.