sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி விஸ்வரூப வளர்ச்சி பெறும்! ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் நம்பிக்கை

/

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி விஸ்வரூப வளர்ச்சி பெறும்! ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் நம்பிக்கை

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி விஸ்வரூப வளர்ச்சி பெறும்! ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் நம்பிக்கை

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி விஸ்வரூப வளர்ச்சி பெறும்! ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் நம்பிக்கை


ADDED : செப் 18, 2025 12:22 AM

Google News

ADDED : செப் 18, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'பல்வேறு சவால்கள் எதிர்வந்தாலும், அடுத்து வரும், 20 முதல் 30 ஆண்டுகளில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் விஸ்வரூப வளர்ச்சி பெறும்,'' என, இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இந்தியா இன்டர்நேஷனல் 'நிட்பேர்' 52வது கண்காட்சி, திருப்பூர் அடுத்துள்ள, திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. ஐ.கே.எப்., அசோசியேஷன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், 'பசுமையால் உலகை பின்னுவோம்' என்ற மையக்கருத்துடன், கண்காட்சி துவங்கியுள்ளது. நேற்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ள கண்காட்சி, தினமும், காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்க உள்ளது.

கண்காட்சி வளாகத்தில், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, சேலம், கரூர், பெங்களூரு, கொல்கத்தாவை சேர்ந்த, உற்பத்தி நிறுவனங்கள், பனியன் துணி, ஆடைகள், காலுறைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, அமெரிக்கா, நார்வே, ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பார்வையிட வந்துள்ளனர்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சுதிர் சேக்ரி, கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் நேற்று முதல், வர்த்தக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், இலங்கையில் இருந்து வந்திருந்த பெண் வர்த்தகர்களும், ஸ்டால்களை பார்வையிட்டனர்.

கண்காட்சி குறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் சேக்ரி பேசியதாவது:

புதிய எழுச்சியுடன், 'நிட்பேர்' கண்காட்சி துவங்கியுள்ளது. கடந்த, 2024-25ல், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி, 1.38 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்தது. அதில், அமெரிக்காவின் பங்கு, 46 ஆயிரத்து, 600 கோடி ரூபாய். நடப்பு நிதியாண்டு துவக்கத்தில், 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி ஆகிவிட்டது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு காத்திருக்கிறது.

அடுத்த சீசனில், 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி நடக்கும். அமெரிக்க பிரச்னை விரைவில் முடியும்; ஒரு சீசன் ஆர்டர் ஏற்றுமதியில் மட்டும் சிறிய பாதிப்பு உருவானது. அதுவும், மூன்று வாரங்களில் சீராகும்.

அமெரிக்க மக்களும், பசுமை ஆடைகளையே விரும்புகின்றனர். வர்த்தகர்களும், தொடர்ந்து வர்த்தகம் செய்யவே விரும்புகின்றனர். இதன் எதிரொலியாக, அமெரிக்க, பிரதிநிதிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில், சுமூக பேச்சுவார்த்தை துவங்கி, நல்ல தீர்வு கிடைக்கும்.

அமெரிக்க வரி உயர்வால், ஏற்றுமதி மதிப்பு, நிறுவனங்கள் மூடப்படுகின்றன; தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர்' என்பது போன்ற தகவல்கள் உண்மைக்கு மாறானவை. திருப்பூர் மீண்டும் எழுச்சி பெறும்.

விரைவில், பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அடுத்த ஆண்டில், பிரிட்டன் வர்த்தகம், 25 சதவீதம் அதிகரிக்கும். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில், 10 ஆயிரத்து, 300 கோடி என்ற வர்த்தகம்; 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும்.

அமெரிக்காவுக்கு மாற்றான சந்தைகளை, ஏ.இ.பி.சி., கண்டறிந்து வருகிறது. அதன்படி, புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், வெளிநாடுகளில் நடக்கும் ஜவுளி கண்காட்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.

ஆடை ஏற்றுமதிஅதிகரிக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒவ்வொரு ஸ்டால்களிலும், மிக தரமான ஆடைகள் இடம்பெற்றுள்ளன. உலக நாடுகள் எதிர்பார்க்கும் வகையில், நீடித்த நிலையான ஆடை உற்பத்தியில் திருப்பூர் மிகவும் முன்னேறிவிட்டது என்பதை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது.

பசுமை தொழில்நுட்ப ஆடை தயாரிப்புக்கு, 52 வது 'நிட்பேர்' கண்காட்சி மாபெரும் திருப்புமுனையாக இருக்கும். பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும். வரும்., டிச., மாதத்துக்குள், வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஐரோப்பிய ஒன்றியத்தின், 27 நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பிரதிகள் வருகை, மிகவும் பயனுள்ளதாக இருந்தது; அடுத்த சில வாரத்துக்குள், இந்திய அரசு பிரதிநிதிகள், பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டனுடன், வரலாறு காணாத அளவுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும். தற்போது மட்டுமல்ல, அடுத்து வரும், 20 முதல் 30 ஆண்டுகள் வரை, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் விஸ்வரூப வளர்ச்சி பெறும்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை திருப்பூரில் துவக்கினோம். ஒவ்வொரு நிறுவனங்களிலும், 5 சதவீதம் அளவுக்கு இருந்த செயற்கை நுாலிழை ஆடைகள் பங்களிப்பு, தற்போது, 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டில், செயற்கை நுாலிழை ஆடைகள் பங்களிப்பு, 30 சதவீதம் வரை அதிகரிக்கும்.

- சக்திவேல்,

ஐ.கே.எப்., சேர்மன்

திருப்பூரே சரியான தீர்வு...


புதிய தொழில்நுட்பத்தில், புவிக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், கண்காட்சி அரங்கை நிரப்பியுள்ளன. 52வது 'நிட்பேர்' கண்காட்சி, புதிய எழுச்சியுடன் துவங்கியுள்ளது. மூன்று நாள் நடக்கும் கண்காட்சியால், புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.

இதுபோன்ற கண்காட்சிகள் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான, ஆடை உற்பத்தி செய்யும் பசுமை கேந்திரமாக திருப்பூர் மாறியுள்ளதை, வெளிநாட்டு வர்த்தகர்கள் அறிய முடிகிறது.

பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், கண்காட்சியை பார்வையிட பதிவு செய்துள்ளனர். திருப்பூர் ஆயத்த ஆடை கொள்முதல் செய்ய ஏற்ற நகரம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு திருப்பூர் தான் சரியான தேர்வு என்பதை, இக்கண்காட்சி வாயிலாக, வர்த்தகர்கள் அறிந்து கொள்வர்.

- சுப்பிரமணியன்,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்

ஏற்றுமதி வர்த்தகம் உயர்வு


கடந்த இரண்டு ஆண்டில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியும், ஏற்றுமதியும், 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தித்துள்ள சிறிய சவால்கள், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். எதிர்காலத்தில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களும், வர்த்தக முகமைகளும், திருப்பூருடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்யவே விரும்புகின்றன. 'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' படிநிலைகளே, திருப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

- இளங்கோவன்,

'அபாட்' தலைவர்

முதன்முறையாக, கொலம்பியாவை சேர்ந்த வர்த்தக முகமைகளும், கண்காட்சியை பார்வையிட முன்பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதிக்கு இணையாக, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆர்டர்களை ஈர்க்கும் வகையில், இக்கண்காட்சி குறித்து, வடமாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது


பிரமிப்பாக இருக்கிறது


இலங்கையில் இருந்து வந்துள்ள பெண் வர்த்தகர்கள் கூறுகையில், 'நிட்பேர்' கண்காட்சியில் ஒரே இடத்தில், அதிகபட்ச ஆடை ரகங்களை பார்க்க முடிகிறது. இதுவரை பார்க்காத பின்னல் துணிகளையும் பார்க்கிறோம். பசுமை சார் உற்பத்தி ஆடைகள் என்பது பிரமிப்பாக இருக்கிறது; ஒவ்வொரு ஸ்டால்களிலும், ஆர்வமாக கேட்டறிந்து வருகிறோம்,' என்றனர்.

அமெரிக்கவால் ரூ.1,500 கோடி பாதிப்பு


ஐ.கே.எப்., தலைவர் சக்திவேல் மேலும் கூறுகையில், ''திருப்பூரின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்க ஏற்றுமதியின் பங்களிப்பு, 14 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த, ஆக., 27ம் தேதிக்கு முன் வரை, பேச்சுவார்த்தை வாயிலாக, சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு பின்னரே, ஏற்றுமதி சுணக்கமாகியுள்ளது. அமெரிக்க வர்த்தகர்கள் நம்முடன் வர்த்தகத்தை தொடர விருப்பம் தெரிவிக்கின்றனர். கூடுதல் வரி செலவுகளை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கின்றனர். அதன்படி, அமெரிக்க வர்த்தகத்தில், இந்தாண்டு, 1,500 கோடி ரூபாய் பாதிப்பு இருக்கும். சில மாதங்களுக்கு பின், ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலையை அடையும். தொழில் மிகவும் பாதிக்கப்பட்டதாக பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us