/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு; மேலும் 2 பேர் மீது 'குண்டாஸ்'
/
ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு; மேலும் 2 பேர் மீது 'குண்டாஸ்'
ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு; மேலும் 2 பேர் மீது 'குண்டாஸ்'
ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு; மேலும் 2 பேர் மீது 'குண்டாஸ்'
ADDED : செப் 18, 2025 12:16 AM
திருப்பூர்; தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும், இருவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 41. மாற்றுத்திறனாளியான இவர், ஐகோர்ட் வக்கீல். இவருக்கும், இவரின் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
சமீபத்தில், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சித்தப்பா தண்டபாணி நடத்தி வரும் தேன்மலர் மெட்ரிக் பள்ளி முறையான அனுமதியில்லாமல், விதிமுறை மீறி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டில், கோர்ட் சம்பந்தப்பட்ட வகுப்பறைகளை இடிக்க உத்தரவிட்டது.
இதற்காக, ஜூலை 28ல் இடம் அளவீட்டை பார்க்க நண்பர்கள், உறவினர் என, நான்கு பேருடன் முருகானந்தம் சென்றார். அப்போது, கூலிப்படையினர் அவரை வெட்டி கொன்றனர்.
இதுதொடர்பாக, சித்தப்பா தண்டபாணி, அவரின் மகன் கார்த்திகேயன் உட்பட, 18 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சித்தப்பா தண்டபாணி, தட்சிணாமூர்த்தி, நாட்டுதுரை என, ஆறு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தற்போது, திருச்சியை சேர்ந்த குமார், 31, நாமக்கல்லை சேர்ந்த மகேஷ், 35 என, மேலும், இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., பரிந்துரையின் பேரில், கலெக்டர் மனிஸ் நாரணவரே உத்தரவிட்டார்.
அவ்வகையில், இதுவரை இவ்வழக்கில்,மொத்தம், எட்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.