/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனித உழைப்பை முறையாக பயன்படுத்த வேண்டும்! பி.சி.சி., செயலாளர் வேண்டுகோள்
/
மனித உழைப்பை முறையாக பயன்படுத்த வேண்டும்! பி.சி.சி., செயலாளர் வேண்டுகோள்
மனித உழைப்பை முறையாக பயன்படுத்த வேண்டும்! பி.சி.சி., செயலாளர் வேண்டுகோள்
மனித உழைப்பை முறையாக பயன்படுத்த வேண்டும்! பி.சி.சி., செயலாளர் வேண்டுகோள்
ADDED : செப் 07, 2025 03:21 AM

பல்லடம் : ''மனித உழைப்பை முறையாக பயன்படுத்தினால், பிற நாடுகளை எதிர்பார்க்கும் அவசியம் இருக்காது'' என, பல்லடம் கறிக்கோழி ஒருங் கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன், மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
இந்தியா -- அமெரிக்கா இடையே எத்தனையோ வணிக ரீதியான பரிமாற்றங்கள் உள்ளன. அமெரிக்கா விதித்துள்ள, 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பு என்பது இரு நாடுகளுக்கும் இருந்த போதும், இந்தியாவால், அமெரிக்காவுக்கு தான் அதிக பாதிப்பு இருக்கும்.
விவசாய விளை பொருட்களை மையப்படுத்தி அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த வரி விதிப்பு நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. அளவுக்கு அதிகமான மனித சக்தி கொண்ட நாம், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சாமல், நமது சுய தேவைக்கான உற்பத்திகளை பெருக்கிக் கொள்ள வேண்டும்.
நம் நாட்டுக்கு என்ன தேவைப்படுகிறதோ, எந்தெந்த பொருட்களின் தேவை அதிகம் உள்ளதோ அவற்றையெல்லாம் பெருக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சா எண்ணெயை பொருத்தவரை அமெரிக்காவை தவிர்த்து, வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம்.
நமது நாட்டில் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்யும் அளவுக்கு தேவையான விளை நிலங்கள், மனித சக்தி ஆகியவை அளவுகடந்து உள்ளன. திட்டமிட்டு செயல்பட்டால், உலக நாடுகளுக்கே நாம் இங்கிருந்து அனுப்பும் அளவுக்கு நம்மிடம் வலிமை உள்ளது.
மனித சக்தியை வீணடிக்காமல் திட்டமிட்டு செயல்பட்டால், உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் இந்தியா முன்னேறி விடும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழில் துறைகளில், இன்னும் மனித சக்திகள் தேவைப்பட்டுக் கொண்டுதான் உள்ளன.
ஆனால், தேவையான இடங்களில் பயன்படாமல், பல இடங்களில் வீணடிக்கப்பட்டும் வருகின்றன. மத்திய மாநில அரசுகள் இது குறித்து ஆலோசித்து இதை முறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார உற்பத்தி பெருகுவதுடன், நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.