/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூதாட்டம்; 6 பேர் கைது ரூ.1.07 லட்சம் பறிமுதல்
/
சூதாட்டம்; 6 பேர் கைது ரூ.1.07 லட்சம் பறிமுதல்
ADDED : செப் 07, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம், கணபதிபாளையத்தில் பணம் வைத்து சிலர் சீட்டாட்டம் விளையாடி வருவதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு சோதனை செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட கவின், 26, ரமேஷ்குமார், 42, சிவக்குமார், 40, பாலு, 62, சேகர், 54, செந்தில், 57 என, ஆறு பேரை கைது செய்து, ஒரு லட்சத்து, 7 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.