/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் அரங்கேறிய தேர்தல் 'நாடகம்'
/
பள்ளியில் அரங்கேறிய தேர்தல் 'நாடகம்'
ADDED : டிச 14, 2025 07:29 AM

தி ருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் தேர்தல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வேட்பு மனு தாக்கலில் துவங்கி வேட்பாளர் வெற்றி பெறும் வரையிலான நிகழ்வுகளை செயல்விளக்கமாக மாணவிகள் நிகழ்த்தினர்.
ஓட்டுப்பதிவு நாள், ஓட்டுச்சாவடி மையம், ஓட்டுச்சாவடி எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
ஓட்டுப்பதிவு அலுவலர், துணை அலுவலர், உதவி அலுவலர், கண்காணிப்பாளர் பணி என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துக்கூறினர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், உதவி அலுவலரிடம் வரிசை, பாகம் எண்ணை சரிசெய்த பின், விரலில் மை வைப்பது, வாக்காளர்களாக ஓட்டளிப்பது, பேலட் மெஷினில் வேட்பாளர், சின்னத்தை தேர்வு செய்து ஓட்டளிப்பது குறித்து மாதிரி ஓட்டுச்சாவடியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அடுத்ததாக, ஓட்டு எண்ணிக்கை நடவடிக்கை துவங்கியது. கன்ட்ரோல் யூனிட்டில் இருந்து பேலட் யூனிட் பிரித்தெடுப்பது, பூத் ஏஜென்டுகளிடம் காட்டி விட்டு, ஒவ்வொரு வேட்பாளரின், பதிவான ஓட்டு, எண்ணப்பட்ட ஓட்டு விபரங்கள் அறிவிக்கப்பட்டது. எந்த வேட்பாளர் முன்னிலையில் உள்ளார் என அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டது.
அடுத்த அறையில் தேர்தல் முடிந்த பின் நடக்கும் பதவியேற்பு; எம்.எல்.ஏ. உறுதிமொழி ஏற்பு காட்சி, வேறு ஒரு அறையில் சட்டசபை கூட்ட தொடர், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு, முதல்வர் தேர்வு, பதவியேற்பு, அமைச்சர்கள் பதவியேற்பு ஆகிய காட்சிகள் தத்ரூபமாக மாணவியரால் செய்து காட்டப்பட்டது.
பள்ளி மாணவியர் வேட்பாளர், கட்சி எம்.எல்.ஏ. அமைச்சர், முதல்வர், சாமானிய வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் போல் வேடமிட்டு வந்திருந்தனர். வாக்காளர் போல தோற்றமும், அரசியல் கட்சிகளை சேர்ந்த பூத் ஏஜென்ட், கோட் சூட் அணிந்த தேர்தல் அலுவலர் போன்ற காட்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தன.

